போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்
ஈரோடு,-த.மா.கா., இளைஞரணி சார்பில், ஈரோட்டில் போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நடந்தது.
அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில், மாநில பொது செயலாளர் விடியல் சேகர் மற்றும் நிர்வாகிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
பின் யுவராஜா கூறியதாவது: தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அரசை வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அரசுக்கு அனுப்பப்படும்.
முன்னதாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், விழிப்புணர்வுக்கான மனுவாகவும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், ரபீக் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!