சிறுத்தை நடமாடுவதாக தகவல் உறுதி செய்ய கேமரா பொருத்தம்
பவானி,-அம்மாபேட்டை அருகே, சிறுத்தை நடமாடுவதாக தகவல் கிடைத்த நிலையில், உறுதி செய்வதற்காக, வனத்துறையினர் கேமரா வைத்துள்ளனர்.
அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டி, பாப்பம்மாள் குட்டை பகுதி உள்ளது. இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி விவசாயிகளிடம் இருந்து, வனத்துறையினருக்கு தகவல் போனது. இதை தொடர்ந்து சென்னம்பட்டி ரேஞ்சர் ராஜா தலைமையில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட, முரளி பாப்பம்மாள் குட்டை பகுதியில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நேற்று பொருத்தப்பட்டன.
மேலும், வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், வனத்துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!