பெருந்துறை டவுன் பஞ்.,ல் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பெருந்துறை,-பெருந்துறை டவுன் பஞ்., கூட்டத்தில், கவுன்சிலர்கள் வெளி
நடப்பு செய்ததால், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியவில்லை.
பெருந்துறை டவுன் பஞ்., மாதாந்திர கூட்டம், இரண்டு மாதத்துக்கு பிறகு நேற்று நடந்தது. தலைவர் ராஜேந்திரனின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் சித்திக் அலி, புஷ்பா, சரண்யா, நந்தகோபால், சுப்பிரமணியன், பிரபாவதி மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அருணாசலம், வளர்மதி, கோமதி, புனிதவதி என, 10 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட, 35 தீர்மானங்களும் நிறைவேறவில்லை.
பெருந்துறை டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இதில் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சண்முகம் மற்றும் எட்டு பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். காங்., கவுன்சிலர் ஒருவர், அ.தி.மு.க.,வில் நான்கு கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!