கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு
ஈரோடு,-அரச்சலுார் அருகே கொல்லன்கோவில் காலனியை சேர்ந்த நாகேந்திரன் மகன் ஜீவா, 25; திருமணம் ஆகாதவர். விழாக்களில் டிரம்ஸ் செட் இசைக்கும் பணி செய்து வந்தார். விழாவுக்கு சென்றுவிட்டு வந்த ஜீவா, நேற்று முன்தினம் மதியம், ஊர் கிணற்று சுற்றுச்சுவர் மீது அமர்ந்து, அண்ணன் மற்றும் தந்தையுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றினுள் விழுந்தார். சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், ஜீவாவை உடலை மீட்டனர். இதுகுறித்து அரச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!