சமூக பாதுகாப்பு திட்டத்தில் 22 பயனாளிகளுக்கு உதவி
ஈரோடு,-ஈரோடு தாலுகா அலுவலகத்தில், இரண்டாம் நாள் ஜமாபந்தி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடந்தது. இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஈரோடு மேற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட நான்கு மாற்றுத்திறனாளிகள், மூன்று பயனாளிகளுக்கு உதவித்தொகை, 15 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை என, 22 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. தாசில்தார் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல மாவட்ட அளவில், 10 தாலுகாவிலும் இரண்டாவது நாள் ஜமாபந்தி நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!