டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தியவர் தப்பினார்
சத்தியமங்கலம்,--தாளவாடி அருகே திகினாரை கரளவாடி பிரிவில், தாளவாடி பொது வினியோக திட்ட வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ், தனி வருவாய் ஆய்வாளர் தர்மராஜன் ஆகியோர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மூட்டைகளுடன் ஒருவர் வந்தார். அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்தார். மூட்டைகளில், ௧௫௦ கிலோ ரேஷன் அரிசி இருந்ததாக அதிகாரிகள் கூறினர். டூவீலருடன் அரிசியை பறிமுதல் செய்து, தப்பிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!