சென்னிமலையில் எஸ்.பி., ஆய்வு
சென்னிமலை,-ஈரோடு மாவட்ட புதிய எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற ஜவகர், சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று ஆய்வுக்கு சென்றார். ஸ்டேஷனில் வழக்கு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது, மூன்று தினங்களுக்கு முன் ஈங்கூரில், தனியார் நிறுவன ஊழியரை கடத்தி, 23 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார்.
அதேபோல் சென்னிமலை அருகே உப்பிலிபாளையத்தில், தோட்டத்தில் துாங்கிய விவசாயி மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதில் விவசாயி சம்பவ இடத்தில் பலியானார். ஓராண்டாகியும் கொலையாளிகள் குறித்து இதுவரை துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு எஸ்.பி., சென்று பார்வையிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!