Load Image
Advertisement

ஆவின் பால் பேக்கிங் ஊழலை நிறுத்த வேண்டும்

சேலம்,-ஆவின் பால், 'பேக்கிங்'குக்கு மட்டும் ஆண்டுக்கு, 224 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்த ஊழல் நிறுத்தப்பட்டால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கலாம் என, விவசாயி தெரிவித்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
நாகராஜன்: பூச்சிக்கொல்லி மருந்தின் விலை உரக்கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல் தடை செய்யப்பட்ட மருந்தும் விற்கப்படுகிறது.
சிவகுமார்: மண் பரிசோதனை செய்து, 7 ஆண்டாகிறது. மண் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
செந்தில்குமார்: சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகம் உள்ளதால், சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விவசாய கிணறுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் உள்ள காலதாமதத்தை சரிசெய்ய வேண்டும்.
வெற்றிமணி: வங்கிகளில் விவசாய கடன் கேட்டால், 10 முறைக்கு மேல் திருப்பி அனுப்புகின்றனர். சரியான காரணங்களை ஒவ்வொரு முறை திருப்பி அனுப்பும்போதும் சொல்வதில்லை. ஏஜன்ட் மூலம் சென்றால் விவசாய கடன் கிடைக்கிறது. பெத்தநாயக்கன்பாளையத்தில் மயில் தொல்லை அதிகம் உள்ளது. தென்னை, பாக்கு விளைச்சலை சேதப்படுத்துகிறது.
அண்ணாமலை: ஏற்காட்டில் காபி, மிளகு அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் காட்டெருமை, குரங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ராஜேந்திரன்: மலை பகுதியில், 2 மாதத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தொடங்கும். அதன் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்க வேண்டும். கடந்த இரு தவணையாக, 2,000 ரூபாய், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி விவசாயிகள் பலருக்கும் கிடைக்கவில்லை.
மாதேஸ்வரன்: 'அமுல்' ஒரு
லிட்டர் பால் பேக்கிங் செலவு, 3 ரூபாய். இது ஆவினில், 6 ரூபாய். விவசாயிகளிடம் தினமும் ஆவினில் கொள்முதல் செய்யப்படும், 30 லட்சம் லிட்டர் பாலில், 25 லட்சம் லிட்டர் பால், 'பேக்கிங்' செய்து விற்கப்படுகிறது. 'பேக்கிங்'குக்கு மட்டும் ஆண்டுக்கு, 224 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்த ஊழல் நிறுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவதோடு பயனாளிகளுக்கு குறைந்த விலையில் பால்
விற்கலாம்.
கலெக்டர் கார்மேகம்: விவசாயிகள் தெரிவித்த பிரச்னைகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையடுத்து கூட்டம் முடிந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement