Load Image
Advertisement

கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சேலம்,-கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவுக்கு கொடியேற்றம் நடந்தது.
சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி தேர் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதற்காக காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை, 11:30 முதல், 12:00 மணிக்குள் சுதர்சன பட்டாச்சாரியார் முன்னிலையில் கோவிலில் கொடியேற்றப்பட்டது.
திரளான பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. வரும், 30 மதியம், 2:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 3 காலை, 8:30 மணிக்கு தேரோட்டம், 4ல் தீர்த்தவாரி
உற்சவம், 5ல், சத்தாபரணம், 6ல் வசந்த உற்சவம் நடக்க உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement