சி.ஐ.டி.யு., நடைபயண பிரசாரம்
தாரமங்கலம்,-தமிழ்நாடு சி.ஐ.டி.யு., மாநில குழு சார்பில், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்ட, வரும், 30ல் திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த, கடந்த, 20ல் ஓசூரில் பிரசார நடைபயணம் தொடங்கியது. அந்த பயணம், நேற்று முன்தினம் தாரமங்கலம் வந்தது. அப்போது மக்களிடம் பிரசாரம் குறித்து விழிப்புணர்வு செய்து, கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து அத்யாவசிய பொருள்களின் விலை உயர்வு; குறைந்தபட்ச ஊதியம், 26 ஆயிரம் ரூபாய்; நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தாதே என்பன உள்பட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட, நகர, பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!