மக்கள் நீதி கட்சி ஆர்ப்பாட்டம்
சேலம்,-நாட்டாண்மை கழக கட்டடம் அருகே சாமானிய மக்கள் நீதி கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். அதில், வண்ணார் சமூகத்தை முழுமையாக பட்டியல் பிரிவில் இணைத்தல்; வண்ணார் சமூக உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து இந்து வண்ணார் பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தல் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!