மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
சேலம்,-சேலம் மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் கொடுத்த, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, அதன் மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், 129 பேருக்கு பரிசு வழங்கி மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது: மாநகராட்சி பள்ளியில் நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 1,397 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 1,243 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 89 சதவீதம். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. வரும் ஆண்டில் அனைத்து பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் பேசினார்.
இதில் அம்மாபேட்டை மாநகராட்சி பெண்கள், மணக்காடு காமராஜர் பெண்கள், பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், புத்துமாரியம்மன் கோவில் மாநகராட்சி உயர்நிலை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!