30ல் தி.மு.க., செயல்வீரர் கூட்டம் கட்சியினருக்கு அமைச்சர் அழைப்பு
சேலம், -வரும், 30ல் தி.மு.க., செயல்வீரர் கூட்டம் நடக்க உள்ளதால், அக்கட்சியினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், ஜூன், 11ல், சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து அவரது நுாற்றாண்டு விழாவை சேலத்தில் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். மறுநாள், காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார். அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக, சேலம், 5 ரோடு, ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில், வரும், 30 காலை, 10:00 மணிக்கு, ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடக்க உள்ளது. அதனால் மாவட்ட செயலர்கள், எம்.பி.,-
எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!