தனியார் ஊழியர் மீது தாக்குதல் போதை வாலிபர் 3 பேர் கைது
சேலம்,-சேலம், எருமாபாளையம்,
குட்டைக்காட்டில் ஆயத்தஆடை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. அங்கு வேலை செய்யும் பிரேம்நாத், ஜெய்சூர்யா உள்ளிட்டோர் பணி முடிந்து, கடந்த 24, இரவு, 7:00 மணிக்கு அங்குள்ள முட்புதர் வழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது
மது அருந்தி கொண்டிருந்த, 3 பேர், ஊழியர்களை வழிமறித்து, 'இந்த பக்கம் வரக்கூடாது' என மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசினர்.
தொடர்ந்து ஜெய்சூர்யாவை சரமாரியாக தாக்கினர். அவர் வலி தாங்க முடியாமல் நிறுவனத்துக்குள் ஓட, அவரை துரத்திச்சென்று கும்பல் தாக்கியது. இதுகுறித்து மற்றொரு ஊழியர் அருள்பிரகாஷ் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, சேலம் களரம்பட்டி, நேதாஜி நகரை சேர்ந்த தமிழ்செல்வன், 29, எருமாபாளையம் சபரிநாதன், 31, சுரேஷ், 31, ஆகியோரை, கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!