செம்மண்ணுடன் லாரி பறிமுதல்
நங்கவள்ளி,- சேலம் சுரங்கம், புவியியல் தனி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், நேற்று முன்தினம் நங்கவள்ளி, சின்னசோரகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, 3 யுனிட் செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மண்ணுடன் வாகனத்தை பறிமுதல் செய்து, நங்கவள்ளி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!