Load Image
Advertisement

சேலம்: சிலவரி செய்திகள்

மகா சக்தி மாரியம்மன்
கோவில் தேரோட்டம்
ஆத்துார்,-ஆத்துார் அருகே நரசிங்கபுரம், பழைய வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு தேர் திருவிழா நேற்று நடந்தது.
தேரை, திரளான பக்தர்கள் வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியே இழுத்து வந்தனர். அதேபோல் ஆத்துார், தாயுமானவர் தெரு, திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 24ல், கும்பாபி ேஷகம் நடந்தது. அங்கு திரவுபதி அம்மனுக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மூலவர்
திரவுபதி அம்மன், தங்க கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நாட்டியப்பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

ஐ.டி.ஐ.,யில் குறுகிய கால
பயிற்சிக்கு விண்ணப்பம்
சேலம்,-சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் வாட்ச், கிளாக் ரிப்பேர் குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடக்க உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள், அசல் ஆவணங்களான மாற்று, மதிப்பெண், ஜாதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, 4 புகைப்படத்துடன் நேரில் அணுகி பயிற்சியில் சேரலாம். விபரங்களுக்கு, சேலம், ஏற்காடு பிரதான சாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ., முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.

தாபாவில் போலீசை தாக்கிய
கும்பலில் ஒருவர் கைது
சேலம்,-சேலம், கருப்பூர், இன்ஜினியரிங் கல்லுாரி அருகே உள்ள தாபா ஓட்டலில், நேற்று முன்தினம் மது அருந்துவது தொடர்பாக இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
இது குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரர் முகமது அலியை ஒரு கும்பல் தாக்கியது. இதுதொடர்பாக அவர் புகார்படி விசாரித்த, கருப்பூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கோட்ட
கவுண்டம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்குமார், 35, என்பவரை கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 30, வசந்தபிரியன், 28, ஆகியோரை தேடுகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement