கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல்
கரூர்,-கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டுக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு 'சீல்' வைத்தனர்.
கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில், சோதனை நடத்த நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களை தி.மு.க.,வினர் தடுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் சோதனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு, 11:30 மணியளவில் சென்னை வருமான வரித்துறை துணை கமிஷனர் மதன்குமார் தலைமையிலான அதிகாரிகள், கரூர் அருகே ராயனுார் தீரன் நகரில் உள்ள மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு சென்றனர். அவர்களை உள்ளே விட அனுமதிக்காததால், வருமானவரித்துறை அதிகாரிகள் தாரணி சரவணன் வீட்டுக்கு 'சீல்' வைத்தனர். இதை கண்டித்து, தி.மு.க.,வினர் துணை மேயர் வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!