சேஷ வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா
கரூர்,-கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திரு விழாவையொட்டி, சேஷ வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது.
கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோ வில் வைகாசி திருவிழா கடந்த, 14ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து வரும், 19 ல் பூச்சொரிதல் விழா, 21 ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பிறகு, நாள்தோறும் பல்வேறு விசேஷ வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.
நேற்று மாலை, கரூர் புஷ்ப வியாபாரிகள் சார்பில், வெள்ளி சேஷ வாகனத்தில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது.
நாளை முதல் வரும், 30 வரை மா விளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 31ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!