குழாயில் விரிசல் வீணாகும் தண்ணீர்
கிருஷ்ணராயபுரம்,-வல்லம் துணை மின்நிலையம் அருகே, குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லத்தில் துணை மின்நிலையம் செயல்படுகிறது. இதனருகே குடிநீர் குழாய் செல்கிறது. நேற்று காலை, இந்த குழாயில் அழுத்தம் காரணமாக விரிசல் ஏற்பட்டு, வல்லம்-கொம்பாடிப்பட்டி சாலையில் குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் குடிநீர் மக்களுக்கு தடையின்றி வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் பல கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. எனவே, குழாயில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!