கூடைப்பந்து போட்டியில் கிழக்கு ரயில்வே அணி வெற்றி
கரூர்,-கரூரில் நடந்து வரும், அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், கோல்கட்டா கிழக்கு ரயில்வே பெண்கள் அணி வெற்றி பெற்றது.
கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில், 63வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி, திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று மாலை நடந்த போட்டியில், கோல்கட்டா கிழக்கு ரயில்வே பெண்கள் அணியும், டெல்லி வடக்கு ரயில்வே பெண்கள் அணியும் மோதின. அதில், கோல்கட்டா கிழக்கு ரயில்வே பெண்கள் அணி, 87-56 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. கோல்கட்டா கிழக்கு ரயில்வே பெண்கள் அணியில் அதிகபட்சமாக பூனம் சதுர்வேதி, 42 புள்ளிகளையும், டெல்லி வடக்கு ரயில்வே பெண்கள் அணியில் ரிம்பி, 23 புள்ளிகளையும் பெற்றனர்.
ஆண்களுக்கான போட்டியில் இந்தியன் ரயில்வே அணியும், பாங்க் ஆப் பரோடா அணியும் மோதின. அதில் இந்தியன் ரயில்வே அணி, 71-44 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்தியன் ரயில்வே அணியில், துஷால் சிங், 15 புள்ளிகள், பாங்க் ஆப் பரோடா அணியில் சுகேஷ் நாயக், 23 புள்ளிகள் எடுத்தனர். இன்று மாலை அரையிறுதி போட்டியும், இறுதி போட்டியும் நடக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!