க.பரமத்தி அருகே கல் குவாரி உள்பட 2 இடங்களில் சோதனை
கரூர்,-க.பரமத்தி அருகே, கல் குவாரியில் நேற்று மாலை வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர்.
கரூரில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீட்டில், நேற்று காலை வருமான வரித்
துறையினர் சோதனை செய்ய வந்தனர். அப்போது, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதால், வருமான வரித்துறையினர் சோதனையை நிறுத்தினர்.
இந்நிலையில், நேற்று மாலை கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, காட்டு முன்னுாரில் உள்ள, தொழிலதிபர் தங்கராஜூக்கு சொந்தமான பாலவிநாயகா புளூ மெட்டல் நிறுவனத்துக்கு, (கல் குவாரி) மூன்று கார்களில், வருமான வரித்துறையினர் சென்று சோதனை நடத்தினர். நேற்றிரவு வரை சோதனை நீடித்தது. தொழிலதிபர் தங்கராஜ், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
* அரசு ஒப்பந்தாரர் சங்கர் ஆனந்த். கரூரில் உள்ள இவரது அலுவலகத்தில் பணிபுரியும் ேஷாபனாவின் வீடு, கரூர் அருகே காந்தி கிராமம் இ.பி., காலனியில் உள்ளது. அங்கு, நேற்று இரவு வருமான வரித்துறையினர் சென்று சோதனை நடத்தினர். சோதனை இரவு வரை நீடித்தது.
ேஷாபானாவின் கணவர் பிரேம்குமார், அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் இன்பரா நிறுவனத்தில், ஒப்பந்த பணிகளை எடுத்து சப்-கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!