காட்டேரியிடம் முறத்தடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
நாமக்கல்,-நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், 'காட்டேரி' வேடமிட்டவரிடம், 'முறத்தடி' வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, நல்லிபாளையம் மாரியம்மன் கோவிலில், நேற்று, பெரியசாமியை மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடத்துடன் பக்தர்கள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அய்யம்பாளைம் அடுத்த பெரியூர் மருதகாளியம்மன் கோவிலிலிருந்து, சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, மே, 23ல் இரண்டாவது காப்பு கட்டும், 24ல் வடிசோறு, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், தீக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 25ல், கிடா வெட்டுதலும் நடந்தது. நேற்று காலை, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், பல்வேறு கடவுள்களின் வேடமிட்டும், 'காட்டேரி' வேடமணிந்தும் ஊர்வலமாக சென்றனர். அவர்களிடம் பக்தர்கள், முறத்தால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. 28ல், கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!