பிளாஸ்டிக் மாசில்லா நாட்டை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
நாமக்கல்-''பிளாஸ்டிக் மாசில்லா நாட்டை உருவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ராபாய் பேசினார்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 'ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும், 'நெகிழி' பொருட்கள் தவிர்ப்பு' மற்றும் 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு கருத்தரங்கு கண்காட்சி, நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ரா பாய் தலைமை வகித்து பேசியதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் வெளியே செல்லும்போது, மஞ்சப்பை எடுத்துச்சென்றால், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு நம்மாளும் உதவ முடியும்.
பிளாஸ்டிக் மாசில்லா நாட்டை உருவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வாழை, தாமரை இலைகள், பாக்கு மர இலைகள், உலோக தட்டுகள், குவளைகள், காகித சுருள், துணிப்பை, அலுமினியத்தால், காகித துணியாலான பொருட்கள் ஆகியவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை, தன்னார்வு பசுமை அமைப்புகள் மூலம் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!