Load Image
Advertisement

எனக்கு ஒதுக்கிய நிதியை காணவில்லை யூனியன் கூட்டத்தில் துணைத்தலைவர் புகார்

எருமப்பட்டி-எருமப்பட்டி யூனியனில் நடந்த சாதாரண கூட்டத்தில், துணைத்தலைவர் லோகநாதன், 'எனக்கு ஒதுக்கிய நிதியை காணவில்லை' என புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எருமப்பட்டி யூனியனில், சாதாரண கூட்டம் அதன் தலைவர் சங்கீதா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., பிரபாக‍ரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
துணைத்தலைவர் லேகநாதன் (அ.தி.மு.க.,): அனைத்து யூனியன் குழு உறுப்பினர்களுக்கும், 15வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து, தலா, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் எனக்கும், ரெட்டிபட்டி அருந்ததியர் மயானத்தில்
சுற்றுச்சுவர், கான்கிரீட் தலம், தடுப்பு சுவர் உள்ளிட்ட பணிக்காக, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியை ஆளும் கட்சியினர், 'எங்களது நிதி' என, பயன்படுத்த விட தடுத்து வருகின்றனர். எனவே, எனக்கு ஒதுக்கிய நிதியை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பி.டி.ஓ., பிரபாகரன்: இது உங்களது நிதி தான், பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
கவுன்சிலர் ராஜ்குமார் (அ.தி.மு.க.,): மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிதியை ஒதுக்க வேண்டும்.
பி.டி.ஓ.,: திட்ட மதிப்பீடை பொறுத்தவரை, அனைத்து கவுன்சிலர்கள் கொடுப்பதையும் அனுப்பி வைத்தேம். ஆனால், ஒரு சில பஞ்., மட்டுமே நிதி வருகிறது.
துணைத்தலைவர்: ரெட்டிபட்டி உள்ளிட்ட பஞ்.,ல், மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு அட்டை வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. பலமுறை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
பி.டி.ஓ.,: இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புறக்கணிப்பு
‍இந்த யூனியன் கூட்டத்தில், அ.தி.மு.க., கவுசிலர்கள், 7 பேர் கலந்து கொண்ட நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள், 5 பேரும், பா.ஜ., கவுன்சிலர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement