சேந்தமங்கலம் தாலுகாவில் ஜமாபந்தி போதிய இருக்கை இல்லாமல் சிரமம்
சேந்தமங்கலம்,-சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில், 1432ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) துணை கலெக்டர் (நிலம்) நடேசன் தலைமையில் நடந்தது. வருவாய் தீர்வாயத்தில் ஈச்சம்பட்டி குரூப், காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளம், நடுக்கோம்பை, திருமலைகிரி, வாழவந்திக்கோம்பை, திருமலைப்பட்டி, பவித்திரம், பவித்திரம் புதுார் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 91 மனுக்களை துணை கலெக்டர் (நிலம்) நடேசனிடம் வழங்கினர். ஆனால், மனு அளிக்க வந்த பொதுமக்கள், பயனாளிகள் அமர இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர்ந்தும், ஒரே இடத்தில் நெருக்கமாக அமர்ந்தும் மனு அளித்தனர். இதனால் வயதானவர்கள் சிரமப்பட்டனர்.
நாமக்கல்லில் கொட்டிய கனமழை
நாமக்கல், மே 27-
நாமக்கல் நகரில், ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில், கத்தரி வெயில், கடந்த, 4ல் துவங்கியது. அன்று முதல் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், மழையுடன், கத்தரி வெயில் துவங்கியது. இருந்தும், வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டது.
மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை, 104 டிகிரியை எட்டியது. அதனால், மக்கள் கடும் வெயிலில் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கிடையில், அவ்வப்போது, இரவு நேரங்களில் லேசான மற்றும் கனமழை பெய்து, சூட்டை தணித்து வந்தது. நேற்று காலை முதல், வெயிலின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, மழை பெய்யத்துவங்கியது. தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
கோடை மழை காரணமாக, தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மழை காரணமாக, மாலையில், வெப்பம் தணிந்து, குளிர்ச்சி காணப்பட்டதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!