ப.வேலூர் டவுன் பஞ்.,ல் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ப.வேலுார்--ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்தது.
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் செல்வகுமார் மற்றும் துணை தலைவர் ராஜா துவக்கி வைத்தனர். ஜூனில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக ப.வேலுார் பஞ்சாயத்துக்குட்பட்ட பள்ளி சுற்றுவட்டாரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
தொடர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை துன்புறுத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி துாய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!