Load Image
Advertisement

வாகனங்களை மறித்து இளம்பெண் அலப்பறை ஈரோட்டில் இரவில் பரபரப்பு

ஈரோடு,-ஈரோட்டில் இரவில், வாகனங்களை மறித்து, இளம்பெண் அலப்பறையில் ஈடுபட்டது, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதி சாலை, நேற்றிரவு, 8:30 மணிக்கு வழக்கம்போல் வாகனங்களால் சுறுசுறுப்பாக இருந்தது. மாலையில் மழையும் பெய்திருந்ததால், இதமான சூழல் நிலவியது. இந்நிலையில் சாலைக்கு ஒரு இளம்பெண் மொபட்டில் வந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காந்திஜி சாலை திருப்பத்தில் மொபட்டை நிறுத்தி, சாலையில் அமர்ந்து விட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், எழுந்து செல்லும்படி அறிவுறுத்தினர். அவரோ சொந்த வீடு போல் அடம்பிடித்து, வாகனங்களை செல்ல விடாமல் தடுத்ததுடன், ரகளையில் ஈடுபட்டதால், மக்களும், வாகன ஓட்டிகளும் தி(மி)ரண்டு நின்று விட்டனர்.
பின், அவரே எழுந்து சிறிது துாரம் நடந்து, எஸ்.பி., அலுவலகம் முன்புள்ள நிறுத்தத்தில், வாகனங்களை மறித்தும், பஸ்சுக்காக நின்றவர்களை தடுத்தும் ரகளை செய்தார். அரை மணி நேரம் போலீசார் போராடியும் ரகளையை நிறுத்ததாதால், ஒரு ஆட்டோவில் ஏற்றி, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவர் மது போதையில் இருந்தாரா என்று சந்தேகம் எழுந்தது. விசாரணையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த இளம்பெண் என்பது தெரிந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement