லாரியில் தீ: 25 டன் பஞ்சு நாசம்
பவானி-பவானி அருகே ஓடும் லாரியில் தீப்பிடித்ததில், 25 டன் பஞ்சுடன் எரிந்து, லாரி சேதமானது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு சொந்தமான லாரி, நாக்பூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு 25 டன் பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த வெங்கடேஷ் ஓட்டினார்.
சித்தோடு-கவுந்தப்பாடி சாலையில் தனியார் கல்லுாரி அருகே, நேற்று அதிகாலை லாரி சென்றது. அப்போது டிரைவர் இருக்கை பின்பகுதியில் எதிர்பாராமல் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் எரிய தொடங்கியதால், டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பஞ்சு என்பதால் தீயின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் ஈரோட்டில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இரண்டு வாகனங்களில் இருந்த வீரர்களும், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 25 டன் பஞ்சுடன், லாரியும் எரிந்து விட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!