காங்கேயம் அருகே விபத்து: நண்பருடன் விவசாயி சாவு
காங்கேயம்-காங்கேயம் அருகே விபத்தில், விவசாயி உள்பட இருவர் இறந்தனர்.
காங்கேயம் அருகே உத்தமபாளையம், வெள்ளியங்காட்டுபுதுாரை சேர்ந்த விவசாயி தங்கராஜ், 60; இவரது உறவினர் ராமசாமி, 70; இருவரும் காங்கேயம்-நத்தக்காடையூர் ரோட்டில், ஸ்பிளண்டர் பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு சென்றனர். வெங்கமேட்டுபதி பிரிவு பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய இருவரையும, அங்கிருந்தோர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நள்ளிரவில் தங்கராஜும், ராமசாமி நேற்று காலையும் அடுத்தடுத்து இறந்தனர். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!