4 நாளுக்கு ஒருமுறை சப்ளை: 4வது குடிநீர் திட்டம் வேகம்
திருப்பூர்-திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப் பணிகள் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். துணை மற்றும் உதவி கமிஷனர்கள், குடிநீர் பிரிவு அலுவலர்கள், பொறியியல் பிரிவினர் கலந்து கொண்டனர்.
மேயர் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் தற்போது 49 மேல்நிலைத் தொட்டிகள் மூலமாக, 4 வது திட்ட குடிநீர் சப்ளை நடக்கிறது.கடைக்கோடி பகுதிகளாக உள்ள சென்னிமலைப்பாளையம், செவந்தாம்பாளையம் உள்ளிட்ட நான்கு பகுதிகள், கட்டுமானப் பணிகள் நிறைவடையாத பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தற்போது, 4 நாள் என்ற முறையிலும், சில பகுதிகளிலும் 2 நாளுக்கு ஒரு முறையும் குடிநீர் சப்ளையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!