பூட்டிய அறைக்குள் பணி செய்யும் தாசில்தார் காங்கேயத்தில் ஏமாந்து திரும்பும் மக்கள்
காங்கேயம்,-ஆதி திராவிட நலத்துறை தனி தாசில்தார், பூட்டிய அறைக்குள் அமர்ந்து பணி செய்வதால், மக்கள் மனு தர முடியாமல் தவிக்கின்றனர்.
காங்கேயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் இயங்குகிறது. காங்கேயம், தாராபுரம் மடத்துக்குளம், உடுமலை பகுதிகளுக்காக இயங்கி வரும் அலுவலகத்தில், தனி தாசில்தாரின் அறை எப்போதும் பூட்டியே காணப்படுகிறது. இதனால் தாசில்தாரை பார்க்க வரும் மக்கள், அவர் இல்லை என நினைத்து திரும்பி செல்கின்றனர்.
ஆனால், இந்த அறைக்குள் செல்ல, அலுவலகத்தில் உள்ளே நுழைந்து, அதன் பின் மற்றொரு வாசல் வழியே நுழைந்து செல்ல வேண்டும். இது தெரியாமல், தனி தாசில்தார் அறை பூட்டப்பட்டிருப்பதாக நினைத்து, பலர் திரும்பி செல்லும் நிலை தொடர்கிறது. தனி தாசில்தார் அறைக்குள் இருந்தால், அவரது அறையை திறந்து வைக்க வேண்டுமென்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!