சமூக ஆர்வலரை கொல்ல முயன்ற டிரைவர் கைது
காங்கேயம்,-காங்கேயம் அருகே சமூக ஆர்வலரை, கொல்ல முயன்ற வழக்கில், லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம் அருகே நத்தக்காடையூரை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார், 49; கடந்த ஆண்டு டிச., ௧6ம் தேதி, காங்கேயம் அருகே நால்ரோடு நத்தக்காடையூர் சாலையில் காரில் சென்றார். அப்போது டிப்பர் லாரியில் வந்த இருவர், கார் மீது மோதி கொல்ல முயன்றனர். காயமடைந்த நிலையில் அவரை ஆயுதங்களால் தாக்கினர். அவர் அளித்த புகாரின்படி, காங்கேயம் போலீசார், ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய லாரி டிரைவரான தேனி மாவட்டம் மயிலளிப்பட்டியை சேர்ந்த மயில்ராஜ், 41, என்பவரை நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!