Load Image
Advertisement

சிலவரி செய்திகள்: ஈரோடு

இரவு நடை ரோந்து
கோபியில் துவக்கம்
கோபி,-கோபி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த, கோபி டி.எஸ்.பி., சியாமளாதேவிக்கு, எஸ்.பி., ஜவஹர் உத்தரவிட்டார். இதன்படி கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, எஸ்.ஐ., கபிலக்கண்ணன் அடங்கிய குழுவினர், கோபி பஸ் ஸ்டாண்டில், போலீசார் நடை ரோந்து என்ற, இரவு நேர ரோந்தை நேற்று துவக்கினர். மொடச்சூர் சாலை, பாரியூர் சாலை, மேட்டுவலவு உள்ளிட்ட பகுதிகளில் நடை ரோந்து சென்றனர்.
சென்னிமலை பேரூராட்சியில்
22 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னிமலை, -சென்னிமலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமை வகித்தார். துணை தலைவர் சவுந்திரராஜன் உட்பட, 13 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு ஒதுக்குவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா நினைவு வளைவு அமைப்பது உட்பட, 22 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சிகோட்டையில்
கும்பாபிஷேக விழா
பவானி,-பவானி அருகே ஊராட்சிக்கோட்டை அம்பேத்கார் நகரில், மகாசக்தி மாரியம்மன், மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பவானியில் ஜமாபந்தி
158 மனுக்கள் அளிப்பு
பவானி, -பவானி உள் வட்டத்தில், இரண்டாவது நாளாக நேற்று, பவானி அ, ஆ., வரதநல்லுார், சன்னியாசிப்பட்டி, மைலம்பாடி, தாளகுளம், ஊராட்சிக்கோட்டை, ஆண்டிக்குளம், ஜம்பை, ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், புன்னம், பருவாச்சி ஆகிய கிராமங்களுக்கு நடந்தது.
இதில் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் வசதி, மயான வசதி, பட்டா மாறுதல் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 158 மனுக்கள் பெறப்பட்டன. பவானி தாசில்தார் தியாகராஜ், வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்கிங் சென்ற பெண்ணிடம்
13 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
தாராபுரம்,-தாராபுரம் அருகே, வாக்கிங் சென்ற பெண்ணிடம், 13 பவுன் தாலிச்சங்கிலியை, பைக் ஆசாமிகள் பறித்துச் சென்றனர்.
தாராபுரத்தை அடுத்த டாக்டர்ஸ் நகரை சேர்ந்தவர் செல்லமுத்து, 65; இவரின் மனைவி திருமாத்தாள், 60; நேற்று மாலை, 5:30 மணியளவில் திருமாத்தாள் வாக்கிங் சென்றார். அப்போது, பைக்கில் வந்த, 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க இருவர், திருமாத்தாள் அணிந்திருந்த, 13 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.
அதிர்ச்சியடைந்து அவர் கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர், பைக் கொள்ளையரை பிடிக்க முயன்றும் பலனளிக்கவில்லை. திருமாத்தாள் புகாரின்படி, தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், நகை பறித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement