உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் வழங்கல்
பாலக்கோடு-பாலக்கோட்டில், உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஏ.ஆர்டி.எஸ்., தொண்டு நிறுவன இயக்குனர் ஆனந்தன் வரவேற்றார். தொடர்ந்து, 450 பேருக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மருத்துவ கல்வி உதவித்தொகையாக, 1.41லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பாலக்கோடு டி.எஸ்.பி., சிந்து, மாவட்ட சுற்றுச்சூழல் துணை பொறியாளர் லாவண்யா, மருத்துவர்கள் மோகனப்பிரியா, பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!