பாராக மாறிய வனப்பகுதி மான்கள் பலியாகும் அபாயம்
அரூர்-தர்மபுரி மாவட்டம், அரூர் நான்கு ரோட்டில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, இருசக்கர வாகனங்களில் வரும் குடிமகன்கள், மது வாங்கிக் கொண்டு, அருகேவுள்ள கொளகம்பட்டி வனப்பகுதியில் குவிகின்றனர். பின், அங்கேயே மது அருந்திவிட்டு பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், பை உள்ளிட்டவற்றை வீசிச் செல்கின்றனர். இதனால், வனப்பகுதியில், 2 கி.மீ., துாரத்திற்கு பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது.
மேலும், அரூர் நகரிலுள்ள இறைச்சி கடைகளில் இருந்து, சாக்கு பைகளில் கொண்டு வரப்படும் கோழிக்கழிவுகள் உள்ளிட்டவையும் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வனப்பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பையை, மான் உள்ளிட்ட வனவிலங்குள் சாப்பிட்டு பலியாகும் அபாயமுள்ளது. எனவே, பிளாஸ்டிக் குப்பையை அகற்றுவதுடன், வனப்பகுதியில் குடிமகன்கள் மது அருந்துவதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!