சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:
இக்கல்லுாரியில் இளங்கலை (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பி.காம்., பி.பி.ஏ.,) மற்றும் அறிவியல் (தாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான (முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறளாளிகள், பழங்குடியினர், அந்தமான் நிக்கோபார் ஆகிய பிரிவினருக்கு) சேர்க்கை கலந்தாய்வு வரும், 29 காலை, 9:00 மணிக்கு கல்லுாரியில் நடக்கிறது. சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கல்லுாரியின் www.gacmenkrishnagiri.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வின் போது, விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிதழ் (அசல் - இ.எம்.ஐ.எஸ்., எண்ணுடன்), மதிப்பெண் பட்டியல் (10, 11 மற்றும் 12ம் வகுப்பு, அசல் சான்றிதழ்கள்), ஜாதி சான்றிதழ் (அசல்), வருமான சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 4, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சேர்க்கை கட்டணமாக கலைப்பிரிவுக்கு, 2,795, அறிவியல் பிரிவிற்கு, 2,815, கணினி அறிவியல் பிரிவிற்கு, 1,915 ரூபாய் எடுத்து வர வேண்டும். அனைத்து சான்றிதழ்களும் மூன்று நகல்கள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!