பள்ளி அருகே தேங்கி கிடக்கும் கழிவுநீரால் மாணவர்கள் அவதி
தர்மபுரி,-மாற்றுத்திறனாளிகள் பள்ளி முன் தேங்கும் கழிவுநீரால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
தர்மபுரி அடுத்த செந்தில் நகரில், காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி முன்புள்ள சாக்கடை கால்வாயின் பல இடங்களில் செடிகள் முளைத்து புதர்போல் மாறியுள்ளது. இதனால், ஆங்காங்கே
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் அவதிக்கு ஆளாகின்றனர். இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும்
நடவடிக்கை இல்லை. மாணவர்களின் நலன்கருதி, இந்த சாக்கடை கால்வாயை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!