Load Image
Advertisement

நிலக்கடலை சாகுபடியில் தரமான விதை பயன்படுத்த வேண்டுகோள்

தர்மபுரி,-விவசாயிகள், வயலில் விதைக்கும் நிலக்கடலையை தரம் பார்த்து விதைக்க வேண்டும்மென, விதை பரிசோதனை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நல்ல விளைச்சல் அதிகரிக்க, விவசாயிகள் தரமான விதையை விதைக்க வேண்டும். இதற்கு விதை பரிசோதனை மிகவும் அவசியம். குறிப்பாக, நிலக்கடலையில், குறித்த ஈரப்பதம் இருந்தால் மட்டுமே, விதை வேரூன்றி வளரும். மேலும், விதையின் புறத்துாய்மை, ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறன் போன்ற காரணிகளை, வயலின் பயிர் எண்ணிக்கையை உறுதி செய்கிறது.
சீரான பயிர் எண்ணிக்கையை பராமரித்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைக்கும். எனவே, விதை விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள விபரங்களை சரிபார்த்து, விதைகளை வாங்க வேண்டும். விதைகள் வாங்கும் முன், அதன் முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையை கேட்டு வாங்கி சரிபார்க்க வேண்டும். விதைகளை, வேளாண் விரிவாக்க மையம் மற்றும் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே, தரமான விதைகளை வாங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement