காதல் தகராறில் டிரைவரின் காதை அறுத்த வாலிபர் கைது
வேலுார்,-வேலுார் அருகே, காதல் தகராறில் ஆட்டோ டிரைவரின் காதை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சேட்டு, 30. இவரது
உறவினர் மகளை, கீழ்செண்டத்துாரை சேர்ந்த வாலிபர் சூர்யா, 23, ஒரு தலையாக காதலித்து வந்தார். இதனால் சேட்டு, சூர்யாவை கண்டித்து வந்துள்ளார். இதில் முன்
விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு, மேல்பட்டி கிராமத்தில் நடந்த கங்கையம்மன் கோவில் திருவிழாவுக்கு சேட்டு, சூர்யா ஆகிய இருவரும் சென்றிருந்தனர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சூர்யா, பிளேடால் சேட்டுவின் இடதுபுற காதை அறுத்தார். படுகாயமடைந்த சேட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மேல்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!