வீடு புகுந்து கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையன் தப்பி ஓட்டம்
வந்தவாசி,-வந்தவாசி அருகே, வீடு புகுந்து கத்தியால் வெட்டி நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரத்தை சேர்ந்தவர் ஓட்டல் தொழிலாளி ரங்கநாதன், 50. இவர் குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டை பூட்டி கொண்டு மாடியில் படுத்து துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு ரங்கநாதன் எழுந்து பார்த்தபோது, ஜட்டியுடன் ஒரு கொள்ளையன் இருப்பதை கண்டு அவரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையன், ரங்கநாதனை இரும்பு கம்பியால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றார்.
அங்கிருந்து தப்பிச்சென்ற கொள்ளையன், வந்தவாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் துாங்கி கொண்டிருந்த மெக்கானிக் பிரபு, 35, என்பவரது வீட்டினுள் நுழைந்து, பிரபுவை கத்தியால் வெட்டி விட்டு அவரது மாமியார் ஜோதியம்மாள், 80, அணிந்திருந்த இரண்டு பவுன் நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு
தப்பிச்சென்றார்.
வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!