தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் மாற்றம்?

தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக சி.டி.ரவியும், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் உள்ளனர்.
தமிழகத்தில் கிளை அளவில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில், மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் மேலிட பொறுப்பாளராக உள்ளவர், அந்த மாநிலத்திற்கு அடிக்கடி சென்று, நிர்வாகிகளை சந்தித்து, கட்சி பணி குறித்து ஆலோசிப்பதுடன், வளர்ச்சி பணிகளை கேட்டறிய வேண்டும். அந்த விபரங்களை, தேசிய தலைமைக்கு தெரிவிப்பதுடன், மாநிலத்திற்கு தேவைப்படும் உதவிகளை பெற்றுத் தர வேண்டும்.
தமிழக பா.ஜ., மைய குழு, மாநில செயற்குழு கூட்டம் போன்றவற்றில் மட்டும் தான் சி.டி.ரவி பங்கேற்கிறார்.
அவர், தமிழகத்தில் முக்கிய நபர்களை மட்டுமே சந்திப்பதாகவும், தொண்டர்களை சந்திக்காததுடன், கட்சி நிகழ்ச்சிகளிலும் சரிவர பங்கேற்பதில்லை என்றும், தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.
சமீபத்தில் நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில், சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட சி.டி.ரவி தோல்வி அடைந்தார். அதனால், அவர் மீது மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும், தமிழக சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., விரும்பிய மயிலாப்பூர், ராசிபுரம், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளை, அ.தி.மு.க., தலைமை ஒதுக்கவில்லை.

இந்த விஷயத்தில் மேலிட பொறுப்பாளர் ரவி கறாராக இருந்திருந்தால், கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கும். 20 தொகுதிகளில் போட்டியிட்டதில், பா.ஜ.,வுக்கு 10 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும்.
இதே நிலை, வரும் லோக்சபா தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதில், மாநில தலைமை உறுதியாக உள்ளது. எனவே, சி.டி.ரவியை மாற்றி விட்டு, தமிழக அரசியல் சூழலை நன்கு அறிந்த ஒருவரை, மேலிட பொறுப்பாளராக நியமிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து (28)
இப்போதைய தமிழகத்துக்கு நன்கு தெரிந்தவர்களை மட்டும் தான் நியமிக்கவேண்டும் என்று அரசியல் விற்பன்னர்கள் பி ஜெ பி க்கு ஆலோசனை .
ஆடியோ மற்றும் வீடியோ எடிட்டிங்.
தமிழ அரசியல் நன்கு தெரிந்த மதன் ரவிச்சந்திரனை மேலிட பொறுப்பாளரா நியமித்து விட்டால் கட்சி ஆகோ.. ஓகோ என வளர்வதற்கு நான் கேரண்டீ
யாரவது ரூம் கதவை கண்ணாடி கதவா மாற்றி விட்டு தீயா வேலை செய்யமுடியுமா?? இப்படி கட்சி நடத்தி..சி டி ரவி இல்லை... தமிழக அரசியல் நல்ல தெரிஞ்ச அமித் ஷா வந்தா கூட உறுபடவைக்க முடியுமா??/ ஏதாவது ஒரு ஆக்கபூர்வமான அரசியல்?
இது எப்பேர்ப்பட்ட கட்சி என்று இப்போது புரிகிறதா?? வெற்றி பெரும் மற்றும் அணைத்து தரப்புக்கும் பொதுவான அணைத்து தரப்பையும் அரவணைத்து செல்லும் ஆக்கபூர்வமான அரசியவாதி தமிழிசையை கவர்னராக்கி ரிட்டையர் செய்து விடுவார்கள்.
ஒண்ணுத்துக்கும் உதவாத வெறும் பேட்டி அரசியல் மற்றும் ஆடியோ வீடியோ அரசியல் செய்யும்
இப்படியே உருட்டிட்டு இரு, அவனுங்க 4 சீட் ஜெயிச்சிட்டாங்க. தூக்கம் போச்சா?