Load Image
Advertisement

எங்கே இருக்கிறது இரு மொழி கொள்கை?: பொன்முடிக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை-'தி.மு.க., முதல் குடும்பத்தினரும், மற்ற தி.மு.க.,வினரும் நடத்தும் பள்ளிகளில், இரு மொழி கொள்கையா கடைப்பிடிக்கப்படுகிறது?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Latest Tamil News

அவரது அறிக்கை:



இன்ஜினியரிங் கல்லுாரிகளில் தமிழ் வழி பாடப் பிரிவு ரத்து செய்வதாக, அண்ணா பல்கலை அறிவித்தது. பா.ஜ., வெளியிட்ட அறிக்கைக்கு பின், 'ரத்து செய்யப்பட மாட்டாது' என, அமைச்சர் பொன்முடி அறிவிக்கிறார்.

பல்கலை ஆட்சிமன்ற குழு உறுப்பினராக, தி.மு.க., - எம்.எல்.ஏ., பரந்தாமன் இருக்கிறார்.

அப்படி இருக்கையில், எடுக்கப்படும் முடிவு குறித்து, அரசுக்கு தெரியவில்லை என்றால், ஆட்சிமன்றக் குழுவில் இருப்பதில் என்ன பயன்?

அரசுக்கு தெரிந்தே பாடப் பிரிவுகள் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்பதை மறைக்க, மழுப்ப பார்க்கிறார் பொன்முடி. 'மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை?' என்று கேட்டிருக்கிறார் பொன்முடி.

என் மகன் படிக்கும் பள்ளியில், மூன்று மொழிகள் பயிற்று விக்கப்படுகின்றன. அவர், 20 வயதில் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே, என் ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இதேபோல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே, என் விருப்பம்.
Latest Tamil News
தி.மு.க., முதல் குடும்பத்தினரும், மற்ற தி.மு.க.,வினரும் நடத்தும் பள்ளிகளில், இரு மொழி கொள்கையா கடைப்பிடிக்கப்படுகிறது? மூன்று மொழிகள் என்றால், ஹிந்தி கட்டாயம் என்ற திசை திருப்பலை, தி.மு.க.,வினர் நிறுத்த வேண்டும்.

புதிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழி கற்றலில், ஹிந்தி கட்டாயம் இல்லை.

ஆனால், தாய்மொழி கற்பது கட்டாயம். இத்தனை ஆண்டுகளில், முதல் முறையாக தாய்மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டு இருப்பது, புதிய கல்வி கொள்கையில் தான்.

மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார்; நீங்கள் தயாரா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (21)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இந்துவின் மொழி தமிழ் என்று உங்க ஜி சொன்னாரே மருந்து விட்டெர அப்போ ஹிந்தியை ஏன் உயர்த்தி பிடிக்க வேண்டும் தாய் மொழி கல்வியும் அது கோடா உலக மொழியான ஆங்கிலமும் போதுமே புதிய கல்வி கொள்கை ?

    • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

      தமிழ் படிக்காமலேயே அரசு உதவி பெறும் உருது மொழி பள்ளியில் பள்ளி படிப்பை முடிக்கலாம் ..இப்படி உத்தரவிட்டது விடியல் அரசு ...அப்ப உருது என்றால் மட்டும் இனிக்குமா ??...

    • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

      கொத்தடிமை சம்பத்குமார், ஹிந்தி கூட இந்திய மொழிதான் ஆனால் உருது அந்நிய நாட்டு மொழி, இந்தியாவை கொள்ளை அடிக்க வந்த பாலைவன கொள்ளைக்காரர்கள் மொழி, அது உன்னக்கு பரவாயில்லையா? தமிழகத்தில் பல உருது பள்ளிகளில் தமிழே கிடையாது. வெட்கமா இல்லையா?

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    தமிழ் படிக்காமலேயே அரசு உதவி பெறும் உருது மொழி பள்ளியில் பள்ளி படிப்பை முடிக்கலாம் ..இதற்கு உத்தரவிட்டது விடியல் அரசு ....

  • J.Isaac - bangalore,இந்தியா

    ஹிந்தி தேசிய மொழி என்று சொன்னது. தென்னிந்தியாவில் குடியேறி தென்னிந்தியாவை கெடுக்கிறார்கள்

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    இந்தியாவில் உள்ளவர் அனைவரும் தமிழ் படியுங்கடா முதலில்

    • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

      தமிழ் படிக்காமலேயே அரசு உதவி பெறும் உருது மொழி பள்ளியில் பள்ளி படிப்பை முடிக்கலாம் ..இதற்கு உத்தரவிட்டது அரசு ...இந்தியாவில் உள்ளவர் அனைவரும் தமிழ் படியுங்க முதலில் என்று விடியல் அரசிடம் வேண்டியதுதானே ...

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    பொன்முடி அவர்களின் உறவினர்கள் நடத்தும். சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழ் வழி பாட திட்டம் உண்டா? மந்திரி பதில்.சொல்ல தைரியம் இருக்கா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்