டெலிகிராம் செயலி வாயிலாக மோசடி: 2.39 கோடி ரூபாயை மீட்ட போலீசார்
கோவை;மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் இருந்த 2 கோடியே 39 லட்சம் ரூபாயை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இணையத்தில் பகுதி நேர வேலை தேடிய அவருக்கு சமூக வலைதளமான டெலிகிராம் செயிலியில் ஒரு 'லிங்க்' வந்தது.
அதை கிளிக் செய்தபோது, 'இணையத்தில் சிறிய வேலைகளை செய்தால், அதற்கு நிறைய பணம் கிடைக்கும்' என்று ஆசை காட்டினர். அதன்படி அவருக்கு பணமும் வந்தது.
இதையடுத்து, 'நாங்கள் சொல்வது போல நிறைய பணம் முதலீடு செய்தால், இன்னும் பல மடங்கு லாபம் கொட்டும்' என்று ஆசை வார்த்தை கூறினர்.
அதை நம்பிய ராஜா, 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை டெலிகிராம் செயலி மூலம் முதலீடு செய்தார். ஆனால், அதன் பிறகு அவருக்கு எந்த பணமும் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவுபடி விசாரித்த போலீசார், மோசடிப் பேர்வழிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.
இதில், பலரிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட பணம் 2 கோடியே 39 லட்சம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த தொகை, அப்படியே முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில், பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு உரிய பணத்தை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள், மோசடி கும்பலின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாறக்கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!