திருப்பூர் மாவட்டம், பல்லடம், காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், த.மா.கா., தலைவர் வாசன் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வருமான வரி சோதனை என்பது அந்த துறையின் தனிப்பட்ட முடிவு. ஊழல், லஞ்சம் என்ற ரீதியில் ஆதாரத்தின் அடிப்படையில்தான் சோதனை நடக்கிறது.
உண்மை நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆள் பலம் - அதிகார பலத்தை பயன்படுத்தி அதிகாரிகளை தாக்குவதற்கும் அவர்களை அடிபணிய வைப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்பது வெறும் விளம்பரமாகி விடக்கூடாது. இதன் வாயிலாக, தமிழகத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
எனவே, வெளிநாட்டு ஒப்பந்தங்களை விரைந்து முடிக்க வேண்டும். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால்தான் கட்டுமான தொழில் வளர்ச்சி பெறும்.
தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தவறு இருந்தால் இதுபோல் சோதனை நடப்பது வழக்கமானது.
அதிகாரிகள் தங்கள் கடமையை செயல்படுத்தும்போது அச்சுறுத்தல் கூடாது. இதன் மூலம், ஆள் பலம், அதிகார பலம், பண பலம் வெளிப்பட்டு வருகிறது. உண்மை நிலையை பொதுமக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர்.
இவ்வாறு, வாசன்கூறினார்.
''லோக்சபா புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பதில் எந்த தவறும் இல்லை,'' என, த.மா.கா., மாநில தலைவர் ஜி.கே., வாசன் தெரிவித்தார்.பொள்ளாச்சியில், கோவை தெற்கு மாவட்டம் சார்பில், பூரண மதுவிலக்கை அமபல்படுத்த கோரி கையெழுத்து இயக்கம் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் தலைவர் ஜி.கே., வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:வருமான வரி சோதனை என்பது, அத்துறை எடுக்க கூடிய தனிப்பட்ட முடிவாகும். குற்றச்சாட்டு, வருமான ஏய்ப்பு இருந்தால் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் சந்தேகப்படும் நபரிடம் விசாரணை நடத்தப்படும்.இது அரசு நிர்பந்தத்தால் நடப்பது எனக்கூறுவது ஏற்புடையதல்ல. ஆளுங்கட்சியினரை சேர்ந்தவர்களது வீடுகளில் ரெய்டு என்றால் அரசியல் என்றும், எதிர்கட்சிகளின் வீடுகளில் நடந்தால் நியாயம் என ஆளுங்கட்சியினர் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.தற்போது ரெய்டு நடைபெறும் அமைச்சர் மீது, நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. இது சட்டத்துக்கு உட்பட்டு தான் நடக்கிறது. நியாயமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை தாக்கும் செயல் ஏற்புடையதல்ல.75 ஆண்டுகளுக்கு பின், லோக்சபாவுக்கு என புதிய கட்டடம், நமது நாட்டை சேர்ந்த வல்லுனர்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. தற்போது, அதன் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என எதிர்கட்சிகள் கூறுவது அரசியல் காரணங்களாகும். லோக்சபா புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பதில் எந்த தவறும் இல்லை.நேர்மை, துாய்மை, எளிமை, வெளிப்படைத்தன்மைக்கு அடையாளமாக செங்கோல் உள்ளது. தமிழகம், தமிழர்கள், கலாசாரத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளது. தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம், வெறும் விளம்பரமாக இருக்க கூடாது. காலக்கெடுவுடன் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, கள்ளச்சாராயம், விஷச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!