Load Image
Advertisement

ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு சிறுதானியம்! அதிகம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கவர்னர் வலியுறுத்தல்

 Small grains for a healthy future! Governor urges farmers to cultivate more    ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு சிறுதானியம்! அதிகம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கவர்னர் வலியுறுத்தல்
ADVERTISEMENT
கோவை;கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம், கடந்த மூன்று நாட்கள் நடந்தது.

நேற்று நடந்த நிறைவு நாள் விழாவில், தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். தொடர்ந்து, வேளாண் பல்கலை மற்றும் 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், கவர்னர் முன்னிலையில் மாற்றிக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:

ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, விவசாயத்தையும் அழித்து விட்டனர். 1800ம் ஆண்டுகளில், ஒரு ஹெக்டருக்கு 7 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்த நாம், ஒரு காலத்தில் பஞ்சம், பட்டினியை எதிர்கொண்டோம்.

இச்சமயத்தில், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். குறைந்த காலத்தில், நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்து, ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து வந்துள்ளனர்.

அரிசி உற்பத்தி உபரியாகியுள்ள சூழலில், அதனால் பல்வேறு சிக்கல்களும் எழுந்துள்ளன. நெல் சாகுபடியால் நீரின் தேவை அதிகம் உள்ளது. பல்வேறு இடங்களில், நிலத்தடி நீரின் அளவு, 500- 1000 அடிவரை கீழே சென்றுள்ளது.

ரசாயன பயன்பாடால் மண்ணின் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையால், மக்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர் என்ற அடிப்படையில், அனைத்திற்கும் தீர்வாக சிறுதானிய சாகுபடி அமையும்.

விவசாயிகள் அதிகளவில் சிறுதானியங்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். குறைவான தண்ணீர் இருந்தால் போதும்; அதிக ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

நிலையான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சிறுதானியங்கள் சாகுபடி செய்யவேண்டியது அவசியம். மாற்று எரிசக்தி தேவை குறித்து, இந்திய பிரதமர், 2015ம் ஆண்டே உலக நாடுகள் முன்பு வலியுறுத்தினார். அப்போது பல நாடுகளுக்கு, சூரிய ஆற்றல் குறித்த விழிப்புணர்வு இல்லை.

தற்போது, 120க்கும் மேற்பட்ட நாடுகள் இதனை ஏற்றுக்கொண்டு, இந்தியாவால் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பில் இணைந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, தலைமை வகிக்க உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கியுள்ளன.

நம் நாட்டில் பெட்ரோலில் தற்போது, 10 சதவீதம் எத்தனால் உள்ளது. இதனை, 20 சதவீதமாக அதிகரிக்க, கரும்பாலை கழிவுகளில் இருந்து தயாரிக்க செயல்பாடுகள் நடக்கின்றன.

இவ்வாறு, அவர் பேசினார்.

நிறைவு விழா நிகழ்வில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement