Load Image
Advertisement

ரெய்டு நடந்ததை லைவ் போடவில்லை! முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதங்கம்

 The raid did not put live! Former Minister Velumani Athangam    ரெய்டு நடந்ததை லைவ் போடவில்லை! முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதங்கம்
ADVERTISEMENT
கோவை;தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய பலி, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலம் முழுவதும், 29ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.

அதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

இரு ஆண்டுகளில் மக்களிடம், தி.மு.க., ஆட்சி அவப்பெயரை பெற்றிருக்கிறது; மக்கள் வெறுப்புடன் உள்ளனர்.

இதற்கு முன், முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றார்; முதலீடு வந்ததா. இப்போது மீண்டும் வெளிநாடு சென்றிருக்கிறார்; முதலீடு வருகிறதா என பார்ப்போம்.

எங்களது வீடுகளில் சோதனை நடத்தினார்கள். மூன்று நாட்கள் 'லைவ்' ஓட்டினார்கள்; இன்று(நேற்று) நடந்த 'ரெய்டு' பற்றி, 'லைவ்' போடவில்லை.

தற்போது ஸ்டாலின் துவக்கி வைக்கும் திட்டங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்து வைக்கின்றனர்.

உழவர் பெருந்தகை நாராயணசாமி நினைவு மண்டபம் யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது; வெட்கம் இல்லாமல், அரசு பொருட்காட்சியில் தி.மு.க., ஆட்சியில் கட்டியபோது போல் வைத்திருந்தனர்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் சரளமாக உள்ளது; சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இருசக்கர வாகனத்தில் சென்று சங்கிலி பறிப்பு நடத்தியதுபோய், காரில் சென்று சங்கிலிப்பறிப்பில் ஈடுபடுகின்றனர்.ஆட்சியின் குறைகளை பதிவிட்டால், பதிவிடுபவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியின்போது, மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென சொன்னவர்கள் எல்லாம் எங்கோ போய் விட்டார்கள்.

இவ்வாறு, வேலுமணி பேசினார்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், ஜெயராமன், செல்வராஜ், தாமோதரன், கந்தசாமி, முன்னாள் மேயர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement