ADVERTISEMENT
கோத்தகிரி:கோத்தகிரி அருகே இடி தாக்கியதில் பெண் தொழிலாளி பலியானார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஓம்நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி இன்பமலர்,44. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
நேற்று கெராடாமட்டம் பகுதியில் சக தொழிலாளிகளுடன் தனியார் தேயிலை தோட்டத்தில் இன்பமலர் பசுந்தேயிலை பறித்து கொண்டிருந்தார். பிற்பகல், 2:30 மணியளவில் கனமழை பெய்துள்ளது.
சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் மழை தீவிரம் அடைந்த நிலையில் இடி தாக்கியதில் இன்பமலர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அருகில் பணியில் ஈடுபட்டிருந்த சகதொழிலாளிகள் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டனர். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!