Load Image
Advertisement

ஹிந்து சமய ஆதீனங்களை அழைத்தது தமிழகத்துக்கு மிகப்பெரிய கவுரவம் அவிநாசி காமாட்சிதாச சுவாமி பெருமிதம்

Avinashi Kamatshitasa Swami Perumitham is a great honor for Tamil Nadu who invited Hindu religious devotees.    ஹிந்து சமய ஆதீனங்களை அழைத்தது  தமிழகத்துக்கு மிகப்பெரிய கவுரவம் அவிநாசி காமாட்சிதாச சுவாமி பெருமிதம்
ADVERTISEMENT
அவிநாசி:புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க, அவிநாசி காமாட்சிதாச சுவாமிகளுக்கு மத்திய அரசின் கலாசாரம் மற்றும் பண்பாட்டு துறையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு, புதுடில்லி புறப்பட்டு சென்றார்.

புதுடில்லியில், புதிய பார்லிமென்ட் கட்டடம் நாளை (28ம் தேதி) திறக்கப்படுகிறது. இதில், பங்கேற்க தமிழகத்திலிருந்து, 20 ஆதீனங்களை மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு துறையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், அவிநாசியிலுள்ள வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள், பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில், பங்கேற்க டில்லி சென்றுள்ளார்.

இது குறித்து, காமாட்சிதாச சுவாமி கூறியதாவது:

புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவிற்கு ஹிந்து சமய ஆதீனங்களை அழைத்ததால் கொங்கு மண்டலமே பெருமை கொள்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, பார்லிமென்ட் கட்டடம் திறக்கும் போது தமிழகத்திலிருந்து சென்ற திருவாவடுதுறை ஆதீனம் மூலம் அப்போதைய பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

தற்போது, புதிய பார்லிமென்ட் கட்டடத்திலும் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள சைவ ஆதீனங்களை அழைத்து, மிகப்பெரிய கவுரவத்தை தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

இதனால், நம் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும், சைவத் திருமுறைகளுக்கும், அருளாளர்கள் அருளிய இதிகாசங்களுக்கும் பெருமை. பாரம்பரியமிக்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதை வரமாக கருதுகிறேன்.

இதனை எனக்கு தேடித் தந்தது அவிநாசிலிங்கேஸ்வரரின் அருளாசி மட்டுமே. பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெறும் வேதாகம பூஜைகளில் கலந்து கொண்டு செங்கோலை பிரதமரிடம் வழங்கி அருளாசி வழங்க உள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement