Load Image
Advertisement

விபத்தில் மூவர் பலி

கோவை:பொள்ளாச்சி அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில், மூவர் பரிதாபமாக பலியாயினர்.

பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்துாரை சேர்ந்தவர் சிவக்குமார், 45. இவர், பிளஸ் 2 படிக்கும் மகன் தினேஷ்குமார், 16 உடன், உடுமலை -- ஆனைமலை சாலையில், தென் சங்கம்பாளையம் அருகில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஆழியாறு புளியங்கண்டியை சேர்ந்த ரமேஷ், 19, சஞ்சய், 16 ஆகியோர் வந்த பைக், சிவக்குமாரின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

சிவக்குமார், ரமேஷ், சஞ்சய் ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த தினேஷ்குமார், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement