தடாகம் ரோட்டில் மீண்டும் துவங்கியது குடிநீர் வினியோகம்
கோவை:தடாகம் ரோட்டில் உடைக்கப்பட்ட குழாய் சரிசெய்யப்பட்டதையடுத்து, குடிநீர் வினியோகம் மீண்டும் துவங்கியுள்ளது.
கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டல விரிவாக்கப்பகுதிகளான கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு, கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்பகுதிகளுக்கு, 11 எம்.எல்.டி., வரை தினமும் தண்ணீர் தரப்படுகிறது.
இந்நிலையில், இடையர்பாளையம் அருகே தடாகம் ரோட்டில் பதிக்கப்பட்ட குழாயை, ரோடு பணிகளின்போது நெடுஞ்சாலை துறையினர் கடந்த வாரம் உடைத்துவிட்டதால், குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதையடுத்து, போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இடையர்பாளையம் பகுதியில், ஒன்றரை அடி ஆழத்தில் கவுண்டம்பாளையம்-வடவள்ளி குடிநீர் திட்ட குழாய் செல்வதால் இந்த உடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குழாய் சீரமைக்கப்பட்டதால், குடிநீர் வினியோகம் மீண்டும் துவங்கியுள்ளதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!